இலங்கையில் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்பது வெறும் கனவாகவே இருக்கும் என்று இலங்கை அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தற்போதய அரசாங்கத்தின் காலம் கடந்து விட்ட நிலையிலேயே இந்த கருத்தை தாம் வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பண்டாரநாயக்க அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்துள்ள அவர், தனிப்பட்ட ரீதியில் இலங்கையில் புதிய அரசியலமைப்பு தேவை என்பதனை தாம் மிகவும் நன்றாக உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அதில் பல பிரச்சினைகளுக்கு தீர்வை காண வேண்டியுள்ளது எனவும், இந்தநிலையில் இந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே புதிய அரசியலமைப்பு சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், பல பிரச்சினைகளை தீர்த்திருக்கலாம் என்றும், எனினும் அது நடக்கவில்லை எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
எனவே தற்போதய இலங்கை அரசாங்கத்தின் காலம் முடிவடையப் போகின்ற போது புதிய அரசியலமைப்பு சாத்தியமில்லை என்றும் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.