சிரியாவின் தெற்கு பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தற்கொலைத் தாக்குதலில் பொதுமக்கள் 32 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 30இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க்பபடுகிறது.
ஸ்வேடியா நகரில் தற்கொலைப்படையை 3 தற்கொலைதாரிகள் தொடர் தாக்குதலை நடாத்தியுள்ளதுடன், அந்த பகுதிக்கு வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள கிராமங்களிலும் இவ்வாறான தற்கொலைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இந்த தொடர் தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.





