லாவோஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த அணை இடிந்ததில் குறைந்ததுஅ 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100இற்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்றும் தெரிவிககப்பட்டுள்ளது.
ஆறு கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், இதன் காரணமாக 6,600-க்கும் மேற்பட்டோர் வீடு இழந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளதுடன், வீடுகளை மோசமாக வெள்ளம் சூழ்ந்து இருப்பதை அந்தப் பகுதியில் எடுக்கப்பட்ட நிழல் படங்கள் காட்டுகின்றன.
கடந்த சில நாட்களாக லாவோஸில் கனமழை பெய்து வருகிற நிலையில் ஞாயிற்றுக்கிழமை இந்த அணை சிறியளவு சேதமடைந்த நிலையில் திங்கட்கிழமை உடைந்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு இந்த அணை கட்டும் பணி தொடங்கியதுடன், இந்த ஆண்டு அந்த அணையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
அணை உடைந்ததற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது.