இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ருவான்டா, உகண்டா ஆகிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை முடித்துக்கெர்ணடு தென்னாபிரிக்கா சென்றுள்ளார்.
அங்கு இரண்டு நாட்கள் தங்கவுள்ள இந்தியப் பிரதமர், இன்று நடைபெறும் “பிரிக்” நாடுகளின் 10ஆவது உச்சி மாநாட்டிலும் கலந்துகொள்கின்றார்.
இந்த மாநாட்டில் இந்தியா தவிர பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வர்த்தக பன்முகத் தன்மையை மறுசீரமைப்பதற்கான ஒரு அழுத்தத்தை தொடங்கியுள்ள நிலையில், குறித்த உச்சிமாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.