சிறந்த உலகை உருவாக்குவதற்கு தொழில்துறை தொழில்நுட்பமும், பலதரப்பட்ட ஒத்துழைப்பும் தேவை என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் இன்று நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ள அவர், அதனால் அனைத்து நாடுகளும் அவர்களின் திறனையும் கொள்கைகளையும் கண்டிப்பாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாடுகளில் வேலை செய்யும் பிரிக்ஸ் நாட்டை சேர்ந்த 20 கோடி தொழிலாளர்களின் நலனுக்கான உலகளாவிய பாதுகாப்புக் கட்டமைப்பை ஒன்றினைந்து உருவாக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பயங்கரவாதமும் தீவிரவாதமும் மிகப்பெரிய அச்சுறுத்தல்களாக விளங்குவதாகவும் மோடி குறிப்பிட்டார்.
அத்துடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை மாற்றியமைக்க வேண்டும் என்பதையும் இந்தியப் பிரதமர் பிரதமர் இந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் வலியுறுத்தியுள்ளார்.