வரி விதிப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், அமெரிக்காவுக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபடுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வோசிங்டன் வெள்ளை மாளிகையில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் கிளாட் நேற்று சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்.
வரி விதிப்பால் இரு தரப்பு வர்த்தக உறவுகளும் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போதே இரு தரப்பிற்கும் இடையில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐரோப்பிய கூட்டமைப்புடன் வர்த்தக தடைகளை குறைத்துக்கொள்வதற்கு அமெரிக்கா சம்மதம் தெரிவித்து உள்ளதாகவும், இரு தரப்பு வர்த்தக உறவில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.