வடக்கு, கிழக்கு மாகாணத்தில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டப் பணிகளை இந்திய அரசாங்கத்திற்கு வழங்க இல்ஙகை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, விருப்பம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இந்த விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.
வடமாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் சுவாமிநாதன், இந்த வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாணிப்பு பணிகளை சீன நிறுவனத்திற்கு வழங்க அண்மையில் யோசனை முன்வைத்திருந்தார்.
இந்த நிலையில் 40 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் குறித்த நிர்மாணிப்புத் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ள நிலையிலேயே, அதற்கு ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.