ஆப்கானிஸ்தான் நாட்டில் தாதியர் பயிற்சி நிலையம் ஒன்றில் ஆயுததாரிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
அங்கிருந்த பாதுகாவலர்கள் இருவர், சாரதி ஒருவர் என 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் குறைந்தது 8 பேர் காயமடைந்ததாக தெரிவி்க்கப்படுகிறது.
முற்பகல் 11மணியளவி்ல் தொடங்கிய இந்த தாக்குதல் மாலை 6 மணிவரையில் தொடர்ததாகவும், தாக்குதல்தாரிகள் வெடிகுண்டை வெடிக்கச் செய்தும், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டும் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 6 மணித்தியாளங்கள் தொடர்ந்த சண்டையை அடுத்து ஆப்கான் பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தின் கட்டுப்பாட்டை திரும்பவும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த தாக்குதலுக்கு தீவிரவாத அமைப்புக்கள் எதுவும் உடனடி உரிமைகோரவில்லை.