தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழ் அரசுக் கட்சி மற்றும் ரெலோ தலைவர்களுக்கும் இடையில் இன்று சிறப்பு சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் உள்ள எதிர்கட்சி தலைவரின் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பில், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், திருகோணமலை மாவட்ட ரெலோ அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் நித்தியாநந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் இதில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.