யாழ்.குடாநாட்டில் தலைதூக்கியுள்ள வாள் வெட்டு சம்பவங்களின் பின்னணியில், சிறிலஙகா படைப்புலனாய்வு பிரிவினர் அல்லது அவர்களது முகவர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சரளமாக சிங்களம் பேசக்கூடியவர்களாக உள்ள இக்கும்பல், எந்தவித கட்டுப்பாடுமின்றி, அச்சமின்றி நடமாடவும் முடிகின்றதென்பதால் அவர்கள் படைத்தரப்பின் ஆசீர்வாதத்துடன் நடமாடுவது உறுதியாகியுள்ளது.
இக்கும்பல் யாழ்.நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றினுள் புகுந்துவிட்டு, அங்கிருந்தவர் இலக்கு இல்லை என்று கூறிவிட்டு வெளியேறியுள்ள நிலையில், வந்திருந்தவர்கள் சரளமாக சிங்களத்தில் உரையாடியதாக குறித்த வர்த்தகர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சாவகச்சேரி கைதடியில் உள்ள வர்த்தக நிலையத்தினுள் உள்நுழைந்த வாள் வெட்டு குழுவினர் வர்த்தக நிலைய உரிமையாளரை வாளினால் வெட்டி உள்ளனர்.
சாவகச்சேரி கைதடி வடக்கில் வர்த்தக நிலையத்தினுள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை புகுந்த கும்பல் வர்த்தக நிலைய உரிமையாளர் மீது வாள் வெட்டினை மேற்கொண்டு அங்கிருந்த பொருட்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
அத்துடன் அங்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நின்றவர்கள் மீதும் தாக்குதல் நடாத்தி உள்ளனர்.
எட்டு உந்துருளிகளில் வந்த கும்பல் ஒன்றே அப்பகுதிகளில் அட்டகாசத்தில் ஈடுபட்டதாக தெரியவருகின்றது.