பாகிஸ்தான் சிறையில் 471 இந்தியர்கள் இருப்பதாக அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ள அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளதுடன், சிறையில் இருக்கும் அந்த 471 இந்தியர்களில் 418 பேர் மீனவர்கள் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
இவர்கள் பாகிஸ்தான் கடல் மற்றும் நிலப்பகுதி எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் என்றும் விளக்கமளிக்கப்பட்டு்ளளது.
அவ்வாறே 108 மீனவர்கள் உள்பட பாகிஸ்தானை சேர்ந்த 357 பேர் இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.