பல்கலைக்கழகங்களில் பகிடி வதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு நாடளாவிய ரீதியில் அனைத்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் உயர் கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
1998 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க சட்டத்திற்கு அமைவாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவ்வாறு பகிடி வதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 10ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பகிடிவதைக்கு எதிரான இந்த சட்டம் இதுவரை முழுமையாக நடைமுறை படுத்தப்படவில்லை என்ற போதிலும், இம்முறை அது முழுமையாக நடைமுறை படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.