திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று சென்னை செல்கிறார்.
காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி உடல்நிலையில் தற்காலிகமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திடீர் பின்னடைவு ஏற்பட்டது.
அதன்பின் மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப்பின் சீராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவக்குழுவினர்கள் தொடர்ந்தும் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்றும் இன்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்தித்து கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
இந்த நிலையில் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வரவுள்ளதாக அவரின் கட்சி சார்பில் தெரிவிக்கப்படப்டுள்ளது.