சிரியாவின் தென்மேற்கு பகுதியில் ஐ.எஸ் அமைப்பினர் 30க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை பணயக்கைதிகளாக வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரியாவின் ட்ரூஸ் என்னும் சிறுபான்மை இனத்தை சேர்ந்தோர் ஆதிக்கம் செலுத்தும் சுவெய்டா பிராந்தியத்தில் கடந்த வாரம் ஐஎஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலின்போது இவர்கள் கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சுவெய்டா பிராந்தியத்தின் பெரும்பான்மையான பகுதி சிரியா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அதேவேளை அதன் சிறியளவிலான பகுதி ஐஎஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
சிரியாவில் மூன்றாவது மிகப்பெரிய மத சிறுபான்மையினராக இருக்கும் ட்ரூஸ் சமூகத்தினர் ஐஎஸ் அமைப்பினரால் மதத்துக்கு விரோதமானவர்களாக கருதப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.