தஜிகிஸ்தான்(Tajikistan)நாட்டில் பயணம் செய்த வெளிநாட்டு மிதிவண்டி ஓட்ட வீரர்கள் நான்கு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் நால்வர் மீதும் கார் ஏற்றி தாக்குதல் நடாத்தப்பட்டதன் பின்னர் கத்திக்குத்தும் மேற்கொள்ள்பட்டு அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த மிதிவண்டி ஓட்ட வீரர்களில் இருவர் அமெரிக்காவையும், மற்றைய ஒருவர் நெதர்லாந்தையும் மற்றையவர் சுவிட்சர்லாந்து நாட்டையும் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அந்த தாக்கதலுக்கு ஐ.எஸ் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்த நாட்டில் ஐ.எஸ் அமைப்பினர் பொறுப்பேற்றுக்கொள்ளும் முதலாவது தாக்குதல் சம்பவம் இது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
எனினும் இந்த தாககுதலை தாங்கள் மேற்கொகண்டதற்கான ஆதாரலங்களை எதனையும் ஐ.எஸ் அமைப்பினர் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.