யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற வன்முறைகளுடன் இராணுவத்தினருக்கு தொடர்பிருப்பதாக உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு எதிராக தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் கட்டளைத் தளபதி ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த வன்முறைகளுக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பில் வினவப்பட்டபோதே, அவ்வாறான குற்றச்சாட்டுகளை நிராகரித்ததுடன், குறித்த வன்முறைகளுக்கும் இராணுவத்தினருக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை எனவும், இராணுவத்தினர் வன்முறைகளில் ஈடுபடுகின்றமை உறுதிசெய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பில் பாரபட்சம் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
செம்மணிப் படுகொலைகளில் இருந்து, இறுதிப் போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் அனைத்தையும் இன்றுவரை சிறிலஙகா இராணுவம் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்த்ககது.