வடக்கில் உள்ள சிறிலஙகா இராணுவ முகாம்களை ஒரு போதும் அகற்ற மாட்டோம் எனவும், இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைகளுக்கு மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இலங்கை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகம் எப்படி பல குறைபாடுகளை கொண்டு காணப்பட்டதோ, அதேபோன்று தான் இன்று மத்தள வானூர்தி நிலையமும் முழுமையடையாத வானூர்தி நிலையமாக காணப்படுகின்றது எனவும், பல பில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட வானூர்தி நிலையம் இன்று எவ்வித பயனுமற்றதாக காணப்படுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
குறுகிய காலக்கட்டத்திற்குள் வானூர்தி நிலையத்தை முழுமையப்படுத்துவதே தமது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தற்போது வடக்கில் காணப்படுகின்ற இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைகளுக்கு மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், ஆனால் எந்தக் காரணம் கொண்டும் வடக்கில் இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.