ஈரான் நாட்டில் ஆதரவின்றி தவித்து வந்த தமிழகத்தை சேர்ந்த 21 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் நாளை மறுநாள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
ஈரான் நாட்டில் மீன்பிடி பணியில் அமர்த்தப்பட்டிருந்த அவர்களுக்கு அவர்களின் முதலாளியால் 6 மாதங்களாக ஊதியம் வழங்காமையால் அவர்கள் அல்லுர நேர்ந்துள்ளது.
இது தொடர்பில் இந்திய மத்திய அரசிடம் தமிழக அரசும், எதிர்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமும் தனித்தனியாக முறையிட்டு அவர்களை மீட்டுத் தருமாறு உதவி கோரியிருந்தன.
இந்த நிலையில் ஈரான் நாட்டில் ஆதரவின்றி தவித்த தமிழக மீனவர்கள் 21 பேரும் மீட்கப்பட்டுள்ள செய்தியை இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தமது கீச்சகப் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.