சிம்பாவே நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான ஜனு பி.எப்.( ZANU–PF ) கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளது.
சிம்பாவே நாட்டில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு சனநாயக முறையில் எந்த வன்முறையும் இல்லாது அமைதியான முறையில் கடந்த செவ்வாய்க்கிழமை பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது.
இந்தத் தேர்தலில் தற்போது சிம்பாவே அதிபராக இருக்கும் எம்மர்சனுக்கும், அந் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான 40 வயதான நெசன் சாமிசாவுக்கும் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போமு வெளியான வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி ஆளும் கட்சியான ஜனு பி.எப். ( ZANU–PF ) பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றுள்ளது.
ஆளும் கட்சி 109 இடங்களை கைப்பற்றியுள்ளதாகவும், இன்னும் 58 இடங்களில் முடிவு அறிவிக்கப்படவில்லை என்றும் சிம்பாவே தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சிம்பாவேயில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றி நடவடிக்கை எடுத்த நிலையில், அங்கு 37 ஆண்டுகளாக ஆட்சி செய்த ரொபேட் முகாபே பதவி விலகச் செய்யப்பட்டு, எம்மர்சன் அதிபராக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.