மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திராவிட முன்னேற்றக் கழத்த்தின் தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்துள்ளார்.
ஸ்டாலின், கனிமொழி ஆகியோரைச் சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்ததுடன், கலைஞர் கருணாநிதியையும் நேரில் பார்த்துள்ளார்.
இதன் பின்ன்னர் ஊடகவியலாளரிடம் பேசிய ராகுல் காந்தி, தான் கருணாநிதியை பார்க்க விரும்பியதாகவும், அவருக்கு ஆதரவைத் தெரிவிக்க விரும்பியதாகவும், தங்களுக்குக் கருணாநிதியுடன் நீண்ட கால உறவு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
அவரை நேரில் பார்ப்பதற்காக சென்னை வந்திருந்ததததாகவும், அவர் நன்றாக குணமடைந்து வருவதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள அவர், கருணாநிதி மிக உறுதியாக இருக்கிறார் என்றும், அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியை நேரில் பார்த்ததாகவும், தமிழக மக்களைப் போலவே அவர் மிகவும் உறுதியானவர் என்றும், சோனியா தனது ஆதரவை அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கச் சொன்னார் எனவும் ராகுல்காந்தி மேலும் கூறியுள்ளார்.