மெக்சிகோவில் 101 பேருடன் புறப்பட்ட வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்த போதிலும் நல்வாய்ப்பாக உயிரிழப்புக்கள் எவையும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
அந்த வானூர்தி 97 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் மெக்சிகோ நாட்டின் வடக்கு மாகாணமான டுராங்கோவில் உள்ள வானூர்தி நிலையத்திலிருந்து இருந்து மெக்சிக்கோ சிட்டியை நோக்கி பயணத்தை தொடங்கிய நிலையில் ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட சிறிது வினாடிகளிலேயே விபத்துக்குள்ளாகி தீப்பற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.
வானூர்தியில் பயணம் செய்த 85 பேர் காயம் அடைந்துள்ள போதிலும் நல் வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்க்பபட்டுள்ளது.
வானூர்தி புறப்படும் போது நிலவிய மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக டுராங்கோ மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
வானூர்தி நிலையத்திற்கு அருகே புற்கள் நிறைந்த பகுதியில் தரையிரக்கப்பட்ட விமாந்த்தில் பற்றி எரியும் தீயை மீட்புக்குழுவினர் அணைப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.