மன்னாரில் இன்று 46ஆவது நாளாக மனித எச்சங்களை தேடி அகழ்வு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மன்னார் நீதவான் பிரபாகரனின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு அகழ்வுப் பணிகளின்போது, நேற்று மாலை மேலும் 2 மனித எலும்பு கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இதுவரை 62 எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த எலும்புக்கூடுகள் மன்னார் நீதிமன்றத்தின் அறையொன்றில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவற்றை பரிசோதனைக்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமான பணியின் போது அங்கிருந்து மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அன்றைய நாள் முதல் தற்போது வரை தொடர்ந்து அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.