இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
பாரமுல்லா மாவட்டத்தில் சோப்பூர் பகுதியில் அனைத்துலக எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவுவதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அந்த பகுதி சுற்றிவளைத்து தேடுதல் நடாத்தப்பட்டது.
இதன்போது இரண்டு தரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்ற நிலையில், இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.