அவுஸ்திரேலியாவில் ஏதிலி அந்தஸ்த்து கோரியுள்ள இலங்கைத் தமிழ் குடும்பங்களை நாடுகடத்துவதற்கு, அங்கு இயங்கும் விமான சேவை நிறுவனங்கள் உதவக்கூடாது என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
அவுஸ்திரேலியாவின் ஏதிலிகள் செயற்பாட்டாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் உயிராபத்து இருக்கின்ற போதிலும், அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏதிலிகளை நாடுகடத்தும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகிறது.
தற்போது நடேசன் மற்றும் பிரியா ஆகிய தம்பதிகளும் அவர்களது இரண்டு பிள்ளைகளும் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கி இருக்கின்றனர்.
இந்தநிலையில் நாடுகடத்தப்படும் ஏதிலிகளை ஏற்றிச் செல்வதற்கு குறித்த விமான சேவை நிறுவனங்கள் மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சிட்னி மற்றும் மெல்பேர்னில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளன.