ஆந்திரப்பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கல் உடைக்கும் தளம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வரும் இந்த தளத்தில், திடீரென இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் உயிரிழந்துள்ள 10 தொழிலாளர்களும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிக அளவிலான ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தியதே வெடி விபத்திற்கு காரணமாக இருப்பதாக சந்தேகிக்கும் காவல்துறையினர், விபத்து குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.