இந்தியாவின் சத்திஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த 14 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அந்த மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் சிறப்பு படையினர் இன்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது படையினருக்கும் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுள்ளது.
இந்த சண்டையிலேயே நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த 14 பேரைத் தாங்கள் சுட்டுக்கொன்றுள்ளதாக பாதுகாப்புப் படைத் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளைய ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என்று கருதி சத்திஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும் சில இயக்கங்கள் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் இந்த இயக்கங்களைச் சேர்ந்தவர்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் இந்தியப் பாதுகாப்புப் படைத் தரப்பு பல்வேறு பிரிவுகளை உருவாக்கி தேடி அழிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.