ஐக்கிய நாடுகளின் தடையையும் மீறி, வடகொரியாவினால் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஆடை ஏற்றுமதி செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி, ரொயிட்டர்ஸ் செய்தி ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி 2017ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடக்கம், 2018ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் இலங்கை, தாய்லாந்து, துருக்கி மற்றும் உருகுவே உள்ளிட்ட நாடுகளுக்கு வடகொரியா 100 மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆடைகளை ஏற்றுமதி செய்துள்ளது.
வடகொரியா மீதான ஐக்கிய நாடுகளின் தடையை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினது ஆறுமாத கால அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.