அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இரட்டைக் காட்டுத் தீயை அந்த மாநிலத்தின் வரலாற்றில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய காட்டுத் தீ என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மைய நாட்களில் பரவியுள்ள இந்த காட்டுத் தீயானது கிட்டத்தட்ட 283,800 ஏக்கர் நிலப்பரப்பை எரித்துள்ளதாகவும், இது கிட்டத்தட்ட லொச் ஏஞ்சல்ஸின் நிலப்பரப்பிற்கு சமனானது என்றும் அவர்கள் விபரித்துள்ளனர்.
சூடான வானிலை, வேகமான காற்று, குறைந்த ஈடுரப்பதன் ஆகிய நிலைமைகளின் மத்தியில் மாநிலத்தின் 16 இடங்களில் தீவிரமாக எரிந்துவரும் காட்டுத் தீயை அணைப்பதற்கு போராடி வருகின்றனர்.
இந்த காட்டுத் தீயால் மாநிலத்தின் வட பிராந்தியத்தில் இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.