கனடாவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் அண்மைய நாட்களாக ஏற்பட்டுள்ள இராஜதந்திர முறுகல் நிலையின் எதிரொலியாக, கனடாவுக்கான தனது பயணிகள் வானூர்திச் சேவைகளை நிறுத்துவதாக சவூதி எயர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று காலையில் தனது கீச்சகப் பக்கத்தின் ஊடாக இந்த தகவலை வெளியிட்டுள்ள சவூதி எயர்லைன்ஸ், எதிர்வரும் 13ஆம் நாளுடன் கனடாவுக்கான மற்றும் கனடாவில் இருந்து புறப்படும் தமது அனைத்து சேவைகளும் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
சவூதி எயர்லைன்ஸ் கனடா ஊடாக குறைந்தது இரண்டு வழித்தடங்கள் ஊடான பறப்புக்களை மேற்கொண்டு வருவதுடன், இரண்டுமே ரொரன்ரோ வானூர்தி நிலையத்தின் ஊடாகவே இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சவூதி எயர்லைன்சின் இந்த அறிவிப்ப தொடர்பில் கனேடிய போக்குவரத்து அமைச்சு இதுவரை எந்தவித கருத்துகளையும் வெளியிடவில்லை.