நல்லூரில் தியாக தீபம் திலீபன் அவர்களின் தூபிப்பகுதியிலுள்ள தனியார் தொலைக்காட்சியின் விளம்பர பலகையினை அப்பகுதியிலிருந்து அகற்றுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பு யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்திபன், குறித்த நினைவு தூபிக்கு பின்னால் இருக்கும் விளம்பரபலகையை அகற்ற நடவடிக்கை எடுக்கமாறு யாழ்.மாநகரசபையிடம் கோரியுள்ளார்.
திலீபன் அவர்களின் நினைவு தூபி பகுதியினை சூழ பாதுகாப்பு வேலி நேற்றையநாள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்களையும் அவர்களது உணர்வுகளையும் மதிக்கும் வகையில், இப்புனித பிரதேசத்திற்குள் உள்ள இந்த விளம்பரப்பலகையை அகற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.