முன்னாள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் மீது பதியப்பட்டுள்ள ஊழல் வழக்குகளின் விசாரணை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை நடைபெற்ற மலேசியா நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், தற்போதய பிரதமர் மகாதீர் முகமதுவிடம் தோல்வியடைந்தார்.
இந்த தேர்தலில் போதே நஜீப் ரசாக் மீது வங்கி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள மகாதீர் முகமது, இந்த விவகாரம் தொடர்பில் நடகவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சம்பவந்தப்பட்ட தரப்பினருக்கு அனுமதியளித்து்ளளார்.
இதைத்தொடர்ந்து, நஜீப் ரசாக் வீடு மற்றும் அலுவலகங்களில் பணமோசடி தடுப்பு பிரிவு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில், பெருமளவான நகைகளும், பல இலட்சம் மதிப்பிலான பணமும் மீட்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பை 150 போலீசார் கணக்கீட்டு வந்த நிலையில், அதன் மொத்த மதிப்பு 27.5 கோடி டொலர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நஜீப் ரசாக் மீது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியமை, நம்பிக்கை மோசடி மற்றும் பண மோசடி உள்பட 7 வழக்குகள் பதியப்பட்டு அவர் கடந்த யூலை மாதம் கைது செய்யப்பட்ட போதிலும், பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியதன் தொடர்பில் 3 குற்றச்சாட்டுகள் நேற்று முன்தினம் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
நஜீப் ரசாக் மீது பதியப்பட்ட இந்த ஊழல் வழக்குகள் மீதான விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் நாள் முதல் நடபெறும் என்று நீதிபதி முகமது நஸ்லான் முகமது கசாலி இன்று அறிவித்துள்ளார்.
இதில், நஜிப் ரசாக் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு ஆண்டு கணக்கில் சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.