எல்லை தாண்டியதாக கைதுசெய்யப்பட்டு கராச்சி சிறையில் தடுத்து வைத்திருந்த 26 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது.
நல்லெண்ண அடிப்படையில் அவர்கள் நேற்றைய நாள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று புதிய அரசாங்கம் பதவி ஏற்கவுள்ள நிலையில் மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.