காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இல்ஙகை அரசு உளவியல் ரீதியாகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று வடமாகாண அமைச்சர் குணசீலன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கை அரசின் இவ்வாறான உளவியல் தாக்கம் மிகவும் பாரதூரமானது எனவும், அதனைப் புரிந்துகொண்டு நாங்கள் செயற்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தமக்குப் பலம் சேர்க்க மேலும் பலரது ஆதரவைப் பெற்றுக் கொள்ளவேண்டும் எனவும், அது அரசியல் கலப்பற்றதாகவும் இருக்கவேண்டும் என்றும் குணசீலன் மேலும் தெரிவித்துள்ளார்.