அமெரிக்காவுடன் தாங்கள் போரில் ஈடுபட போவதுமில்லை, அவர்களுக்கு நிபந்தனையும் விதிக்க போவதில்லை என்று ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.
ஈரானில் நிலவும் மக்கள் போராட்டம் மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்புள்ளதா என்பன குறித்து அந்த நாட்டுத் தலைவர் அயதுல்லா கருத்து தெரிவித்தார்.
இந்த நிலையிலேயே அமெரிக்காவுக்கு ஒரு சில வார்த்தைகள் கூற விரும்புவதாக குறிப்பிட்டு இவ்வாறு தனது கீச்சகப் பதிவில் கூறியுள்ளார்.
பொருளாதாரத் தடைகளைவிட போரை பற்றியும், நிபந்தனைகளை பற்றியும் நிறைய பேசப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானில் நாள்தோறும் நடைபெறும் வாழ்வாதாரப் பிரச்சனைகள் வெளியிலிருந்து வரவில்லை என்றும் அவை உள்நாட்டினரால் உண்டாகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
பொருளாதார தடைகளினால் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும், ஆனால் அதை தாம் எப்படி கையாளப்போகிறோம் என்பது மிக முக்கியம் என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவித் ஜாரிப் தெரிவித்துள்ளார்.