இந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்.
வயது மூப்பு காரணமாகவும், சிறுநீரகம் பாதிப்பு காரணமாகவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தமது 89ஆவது வயதில் அவர் காலமானதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.
சோம்நாத் சட்டர்ஜியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சோம்நாத் சட்டர்ஜி 10 முறை மக்களவை உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சோம்நாத் சாட்டர்ஜி 2004 முதல் 2009 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது மக்களவை சபாநாயகராக இருந்தார்.
அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரும்பப் பெற்றபோது, அவர் பதவி விலகாமையை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.