அமெரிக்க இறக்குமதிகள் மீதான துருக்கியின் வரிவிதிப்பை அடுத்து துருக்கியை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் கார், மதுபானம், புகையிலைப் பொருட்கள் மீதான வரியை துருக்கி அதிகரித்திருப்பது தவறான முடிவு என்றும்,இந்த முடிவுக்கு துருக்கி நிச்சயம் வருத்தப்படும் எனவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
துருக்கியின் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா கடந்த வாரம் இரண்டு மடங்காக உயர்த்தியதிலிருந்து துருக்கி நாணயமான லிராவின் பண மதிப்பு வெகுவாகச் சரிந்தது.
அமெரிக்க பாதிரியார் ஒருவரை விடுதலை செய்வதற்கு துருக்கி மறுத்த விவகாரத்தை தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் விரிசல்கள் தொடரும் நிலையில், துருக்கியின் இறக்குமதிகள் மீது இரண்டு மடங்கு வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் வரி அதிகரிப்பால் ஆத்திரமடைந்த துருக்கி அமெரிக்க இறக்குமதிகளான பயணிகள் வாகனம், மதுபானம், புகையிலை உள்ளிட்ட பல பொருட்கள் மீது மிக அதிகமான வரிவிதிப்பை மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு துருக்கி வரிவிதிப்பை மேற்கொண்டுள்ளமைக்கே அமெரிக்கா துருக்கியை எச்சரித்துள்ளது.