பயங்கரவாதிகளின் தாக்குதல் அச்சம் காரணமாக ஆப்கானிஸ்தானில் நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக் காலமாக அங்குள்ள பள்ளிகள், கல்லூரிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளதுடன், இந்த ஆண்டில் இதுவரை 86 கல்வி நிறுவனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்க்பபடுகிறது.
இந்த நிலையில் நேற்றைய நாள் காபூலில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் கல்வி பயின்றுகொண்டிருந்த 48பேர் கொல்லப்பட்டதுடன், 67பேர் படு காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த பயங்கரத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து அங்கு கல்வி நிலையங்களுக்கு செல்வதற்கு அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.