காணாமல் ஆக்கப்பட்டோரின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலான பரிந்துரைகள் அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் 30 ஆம் நாள் குறித்த அறிக்கையை அரசாங்கத்திடம் கையளிக்க, காணாமற் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் அலுவலகம் முடிவு செய்துள்ளது.
அத்துடன் குறித்த நாளன்று காணாமல் போனோருக்கான அனைத்துலக நாளை, கொழும்பு ஜே.ஆர்,ஜெயவர்த்தன மண்டபத்தில் நடத்த காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தீர்மானித்துள்ளது.
அதன் அடிப்படையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் தீபிகா உடுகம, இதன்போது பிரதம உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.