முல்லைத்தீவீல் புதுக்குடியிருப்பு மருத்துவ மனைக்கு எதிராக உள்ள வீதியில் அமைந்துள்ள தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் தக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் குறித்த இநத மாவட்ட அலுவலகம் சிறிலஙகா படையினரால் உடைக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பில் உள்ள காவல் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் கிந்துஜன், புதுக்குடியிருப்பில் உள்ள காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 14 ஆம் நாள் செஞ்சோலையில் உயிரிழந்த மாணவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு தமிழ்தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவுகூரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் குறித்த அநத் அலுவலகத்தில் யாரும் இல்லாத வேளையில் அங்கு சென்ற 8 சிறில்ஙகா படைச் சிப்பாய்கள், அலுவலகத்தின் கதவினை உடைத்து உட்புகுந்துள்ளதுடன், அலுவலகத்தை சேதப்படுத்தியும் உள்ளனர்.
இதனை அருகில் இருந்த அயலவர்கள் நேரில் கண்டு வீட்டின் உரிமையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து அலுவலகம் தாக்கப்பட்டமை தொடர்பில் புதுக்குடியிருப்பில் உள்ள காவற்துறையினர் முறைப்பாட்டை பதிவுசெய்துய்ளதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.





