கேரள வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் தம்மை தாக்கியதாக மாணவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
புதுடெல்லி பொலிஸ் நிலையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கேரள வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி ஜே.என்.யூ. கல்வி நிறுவன மாணவர்கள் இன்று காலை குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதன்போது பொலிஸார் ஆர்ப்பாட்டத்தை கலைக்க முற்பட்டபோது மாணவர்கள் மீது தடியடி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்பிகாரம் பொலிஸில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டில், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவிகள் மீது இழிவான வார்த்தைகளை பொலிஸார் பிரயோகித்ததுடன் சில மாணவர்கள் மீது தாக்குதலையும் நடத்தினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இக்கருத்துக்கு மறுப்புத் தெரிவித்த பொலிஸார், மாணவர்களை தாங்கள் மோசமாக நடத்தவில்லை எனவும் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.