பாகிஸ்தான் நாட்டுடன் அர்த்தமுள்ள ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து்ளளார்.
பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற இம்ரான் கானுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்திலேயே பிரதமர் மோடி அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அண்டைநாடான பாகிஸ்தானுடன் அமைதிப்பாதையிலான நல்லுறவை இந்தியா விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தெற்காசிய கண்டத்தை பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து விடுவித்தாக வேண்டும் எனவும் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற இம்ரான் கானுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.