ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளால் இன்று கடத்தப்பட்டவர்களில் 149 பேரை அந்த நாட்டின் பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 21ஆம் நாள் வரையில் இடைக்கால போர்நிறுத்தத்துக்கு நேற்றைய நாள் அழைப்பு விடுத்திருந்த நிலையில் தலீபான்கள் இவ்வாறு பயணிகளைக் கடத்தியுள்ளனர்.
குன்டுஸ் மாகாணத்துக்கு உட்பட்ட கான் அபாட் மாவட்டம் வழியாக இன்று காலை பயணித்துக்கொண்டிருந்த மூன்று பேருந்துகளை துப்பாக்கி முனையில் தலிபான் பயங்கரவாதிகள் வழிமறித்து, அவற்றில் சென்ற பயணிகள் அனைவரையும் கீழே இறக்கப் பின்னர் கிட்டத்தட்ட 170 பேரை கடத்திச் சென்றுள்ளனர்.
இதனை அடுத்து கடத்திச் செல்லப்பட்ட இவர்களை மீட்பதற்காக தேடுதல் நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்ட நிலையில், அவர்களிடம் இருந்து 149 பேர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த மீட்பு நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றதுடன், அந்தச் சண்டை தொடர்வதாகவும் தெரவிக்க்பபடுகிறது.
இந்த சண்டையில் தலிபான்கள் 7பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளதாகவும் கூறுப்படுகிறது.