ஆப்கானிஸ்தானின் அதிபர் மாளிகை மற்றும் தூதரங்கள் அமைந்துள்ள முக்கிய பகுதியில் எறிகணைத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
பக்ரீத் பண்டிகையையொட்டி அதிபர் அஷ்ரப் கனி அதிபர் மாளிகையில் இருந்து நேற்று தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருந்த போது, அதிபர் மாளிகையை குறிவைத்து அந்த எறிகணை குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது மற்றொரு எறிகணை வீசப்பட்டதாகவும், இது தூதரக வளாகத்தில் விழுந்து வெடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து உடனடியாக ஆப்கானிஸ்தான் விமானப் படை மற்றும் அமெரிக்க விமானப் படையின் உலங்குவானூர்திகள் எறிகணை குண்டுகள் வீசப் பட்ட இடத்தை சுற்றி வளைத்து குண்டுகளை வீசி பதில் தாக்குதலை நடாத்தியுள்ளன.
அதிபர் மாளிகை, அமெரிக்க தூதரகம் மீது வீசப்பட்ட எறிகணைகளால் யாருக்கும் பாதிப்பு ஏற் படவில்லை என்றும், தலிபான் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் குறித்து ஆப்கானிஸ் தான் அதிபர் அஷ்ரப் கனி கூறியபோது, “ராக்கெட் தாக்குதல் மூலம் ஆப்கானிஸ்தான் மக்களை வீழ்த்தி விடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள் என்றும், அவ்வாறு நினைப்பவர்கள் தோல்வியைத் தழுவுவார்கள் எனவும் தெரிவித்தார்.
பக்ரீத்தை ஒட்டி தலிபான் களுடன் சண்டை நிறுத்தம் கடைப் பிடிக்கப்படும் என்று அதிபர் அஷ்ரப் கனி அறிவித்துள்ள போதிலும், தை ஏற்க மறுத்து தலிபான் தீவிரவாதிகள் தொடர்ச்சி யாக தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.