திருமுருகன் காந்தியை பிணையில் விடுவிக்கக் கோரி அவரது தந்தை தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பேசியதன் பின்னர் நாடு திருப்பிய நிலையில் கடந்த 9ஆம் நாள் பெங்களூரு வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவரை தேசத் துரோக வழக்கில் கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றில் முன்னிலைப் படுத்திய போது, அவ்வாறு தேசத் துரோக வழக்கில் திருமுருகளை சிறையில் அடைக்ப்பதற்கு சைதாப்பேட்டை குற்றவியல் நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.
இதையடுத்து திருமுருகன் காந்தியை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வேறொரு வழக்கில் கைது செய்துள்ள காவல்துறையினர் அவரை சிறையில் தடுத்து வைத்துள்ளனர்.
இதையடுத்து திருமுருகன் காந்தியை காவல்துறையினர் சட்ட விரோதமாக கைது செய்துள்ளார் என்றும், அதனால் அவருக்கு இடைக்கால பிணை விடுதலை வழங்க வேண்டும் என்றும் அவரது தந்தை காந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
ஆனால் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள், ஆட்கொணர்வு மனு வில் இடைக்கால பிணை விடுதலை கோர முடியாது என்பதால் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளதுடன், இது தொடர்பாக மனுதாரர் கீழமை நீதிமன்றத்தை அணுகி பரிகாரம் தேடலாம் என்றும் பரிந்துரைத்துள்ளனர்.