இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லு காங் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவு மேம்படுவது பிராந்திய அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு முக்கியமானது என்று கூறியுள்ளார்.
இரண்டு தரப்பு உறவுகள் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் அண்மையில் பகிந்து கொண்டுள்ள கருத்துக்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன், தெற்கு ஆசியாவில் இரண்டு நாடுகளும் மிகவும் முக்கியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஒரு பொதுவான அண்டை நாடாக இருக்கும் சீனா, இரண்டு தரப்புக்களின் உறவை மேம்படுத்துவதற்கு உதவிகளை செய்யும் என்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லு காங் மேலும் தெரிவித்துள்ளார்.