ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக ரஷ்யா விடுத்த அழைப்பை ஆப்கானிஸ்தான் அரசு நிராகரித்துள்ளது.
தலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுக்கு இடையிலான பிரச்சனைகளை இரண்டு தரப்புமே நேரடியாக பேசி தீர்த்துக்கொள்ளும் என்றும், இதில் மூன்றாவது நபரின் தலையீடு தேவையில்லை என்றும் ஆப்கானிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் ரஷியாவின் அமைதி பேச்சுவார்த்தை அழைப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள தலிபான்கள், அந்த கூட்டத்திற்கு தங்களது தரப்பின் மூத்த உறுப்பினரை அனுப்பி வைக்க உள்ளதாகம் தெரிவித்துள்ளனர்.