Kitchener பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பெண் ஒருவர் பலியானதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Sprucedale Crescent பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலேயே இன்று காலை எட்டு மணியளவில் இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளது.
இந்த வெடிப்பு அருகில் உள்ள குடியிருப்புகளையும் பாதித்துள்ள நிலையில், அருகே உள்ள பத்துக்கும் அதிகமான வீடுகளில் வசித்தோர் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இன்று பிற்பகல் விபரம் வெளியிட்டுள்ள தீயணைப்பு படையினர், அந்தப் பகுதியில் இருந்த 16 வீடுகளைச் சேர்ந்தோர் வெளியேறற்ப்பட்டுள்ளதாகவும், வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மூன்று நாட்களினுள் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் வெடிப்பு இடம்பெற்ற பகுதிக்கு அருகே உள்ள இரண்டு வீடுகளைச் சேர்ந்தோர் வீடுகளுக்கு திரும்ப முடியாது எனவும், வெடிப்பின் காரணமாக அந்த வீடுகள் பலத்த சேதங்களைச் சந்தித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சம்பவ இடத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் செஞசிலுவைச் சங்கத்தினர், வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தோருக்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.