தம்மை பதவிநீக்கம் செய்தால் அமெரிக்க பொருளாதாரமே சீர்குலையும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
2016 தேர்தல் நேரத்தில் இரண்டு பெண்களுக்கு தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சார்பில் பணம் வழங்கப்பட்டதாக அவரின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஊடகம் ஒன்றிற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப், அளித்துள்ள பேட்டி ஒன்றில், தம்மை பதவி நீக்கும் வகையில் அமெரிக்க காங்கிரசில் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவந்தால், சந்தை சரிவை சந்திக்கும் என்றும், எல்லோரும் ஏழையாவார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.
அத்துடன் அந்த இரண்டு பெண்களுக்கு பணம் வழங்கியதன் மூலம் தேர்தல் பரப்புரை விதிகளை மீறவில்லை என்றும், அது தமது தனிப்பட்ட நிதியில் இருந்து வழங்கப்பட்டதே அல்லாது பரப்புரை நிதியில் இருந்து வழங்கப்படவில்லை என்றும் அதிபர் டிரம்ப் விளக்கமளித்து்ளளார்.