முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் வெள்ளம் ஏற்பட்டதாக கேரள அரசு கூறியுள்ள முறைப்பாட்டை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்குவதை தடுக்கவே கேரளா அத்தகை முறைப்பாட்டைக் கூறுவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சி முக்கொம்பு அணை மதகு உடைந்த நிலையில் அதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை பார்வையிட்ட போது அங்கு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டபோது, முன்கூட்டியே மூன்று முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் பின்னரே அணை திறக்கப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்து்ளாளர்.
முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கக் கூடாது என்ற எண்ணத்தில் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தவறான தகவலை கூறியுள்ளது என்றும், அதில் துளியும் உண்மை இல்லை எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேலும் தெரிவித்துள்ளார்.