தேசிய பாதுகாப்பை கவனத்திற் கொண்டும், சிறிலஙகா இராணுவத்தினரின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டுமே, வடக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என்று இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
வெஹேரகல ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் இராணுவத்தினரை பழிவாங்கும் நோக்கில் செயற்படுவதாக, ஒன்றிணைந்த எதிரணியினர் தெரிவித்திருக்கும் கருத்தை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.





